அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை: விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து அதி காரிகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.

போக்குவரத்துத் தொழிலாளர் கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டை யில் உள்ள பணிமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில், கூட்டமைப்பு தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் குழுவினர், போக்குவரத்துத் துறை செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 10-ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காம் கட்ட பேச்சு வார்த்தையின்போது, தினக்கூலி பணியாளர், சேமநலப் பணியாளர், தின ஊதிய நிர்ணயம், பணி நிரந்தரம் செய்வது, விபத்து காரணமாக ஓட்டுநரின் உரிமம் பறிக்கப்படும்போது அவருக் கான மாற்றுப்பணி, 1-4-2003-க் குப் பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு 12 சத வீதத்தை வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்தல், நிர்வாகத்தின் பங்காக 12 சதவீதத்தை ஓய்வூதியத்துக்கு வழங்குதல், ஓய்வுக்கால சேமநலத் திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஓட்டுநர் மீது தேவையற்ற முறை யில் வழக்கு பதிவு செய்வதைத் தவிர்க்க போக்குவரத்துத் துறை நிர்வாகங்கள் காவல்துறையின ரிடம் விவாதித்து ஓட்டுநரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 50 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கூட்டமைப்பு சங்கங்கள் வலியுறுத்தின.

உரிய நிவாரணம்

மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இருந் தாலும், இப்பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது என் றும், தொழிலாளர்கள் மகிழக் கூடிய வகையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் போக்கு வரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச் சர் தலைமையில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்திருப்பதால் இப்பிரச் சினைக்கு விரைவில் இறுதி முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE