சென்னை மாநகராட்சிக்கு ரூ. 846 கோடி வரி வசூல்

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சிக்கு இந்த ஆண்டு ரூ.846.61 கோடி வரி வசூலாகியுள்ளது.

2014-15-ம் நிதியாண்டில் வருவாய் துறை மூலமாக சொத்து வரியாக ரூ.581.82 கோடியும், தொழில்வரியாக ரூ.264.79 கோடியும் வசூலாகியுள்ளது.

இந்த ஆண்டு வரி வசூல் செய் வதில் பல புதிய முயற்சிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண் டது. வரி செலுத்தாத கடைகளின் முன் குப்பைத் தொட்டிகளை வைப் பது, திருநங்கைகளை நட்சத்திர ஓட்டல்கள் முன்பு நடனமாட வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மண்டல அளவில் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் சில கடுமையான விமர் சனத்துக்குள்ளானது. தலைமை அலு வலகத்திலிருந்து வந்த கடுமையான உத்தரவுகள்தான் இதற்கு காரணம் என்று வருவாய் துறை ஊழியர்கள் மத்தியில் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு வசூலிக்கப்பட்டுள்ள வரித் தொகை கடந்த ஆண்டை விட ரூ.132 .61 கோடி அதிகமாகும்.

எனவே, இது போன்ற நடவடிக் கைகளில் மாநகராட்சி தொடர்ந்து ஈடுபடுமா என்று கேள்வி எழுந் துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “வரி வசூலிப்பதில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பாக எந்த உத்தரவும் தரப்படவில்லை. தொடர்ந்து பல காலமாக வரி செலுத் தாமல் இருப்பவர்களை வரி செலுத்த வைக்க உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE