4 தொகுதிகளைப் பெறுவதில் தேமுதிக - பாமக இடையே கடும் போட்டி

By கி.ஜெயப்பிரகாஷ்

விழுப்புரம், சிதம்பரம், ஆரணி, அரக்கோணம் ஆகிய 4 தொகுதிகளை தேமுதிக-வும் பாமக-வும் கண்டிப்புடன் கேட்பதால் பாஜக அணியில் தொகுதி பங்கீடு வியாழக்கிழமை மாலை வரை இறுதி செய்யப்படவில்லை.

பாஜக அணியில் தேமுதிக-வுக்கு 14, பாஜக-வுக்கு 8, பாமக-வுக்கு 9, மதிமுக-வுக்கு 6 அல்லது 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இதில் உதிரிக் கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் எந்தெந்த தொகுதி, யார் யாருக்கு என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது.

இதுதொடர்பாக பாஜக மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பாக தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாமக.வும் கேட்பதால் சிக்கல் நீடிக்கிறது. விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), ஆரணி, அரக்கோணம் ஆகிய 4 தொகுதிகளை பெறுவதில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், பாஜக அணியில் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் நீடிக்கிறது.

இதுதொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பாமக கேட்ட சில தொகுதிகளை நாங்கள் விட்டு கொடுத்துள்ளோம். ஆனால், நாங்கள் கேட்கும் சில தொகுதிகளை விட்டு கொடுக்க பாமக மறுக்கிறது. எனினும் விரைவில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு, வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டபடி பிரச் சாரத்தை தொடங்குவார்’’ என்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்