8-ம் வகுப்பு தேர்வுக்கு தனித் தேர்வர்கள் 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு நடைபெறவுள்ள 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ஏப்ரல் 15 முதல் 21-ம் தேதி வரை ஆன்லைனில் (www.tndge.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தாரர் பன்னிரண்டரை வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அரசு தேர்வுத் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பு மையங் களின் விவரத்தை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125. ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50. விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகல் மற்றும் ரூ.40 மதிப்புள்ள தபால் தலை ஒட்டிய, சுயமுகவரி எழுதப்பட்ட உறையை இணைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பெறப் படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் வருபவை ஏற்கப்படாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்