திருவண்ணாமலை கிரிவலத்தில் புதிய கட்டுப்பாடுகள்

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்க கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, ஆட்சியர் ஞான சேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலையில் மே 3-ம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று சுமார் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, கிரிவலப் பாதை யில் அன்னதானம் வழங்குபவர் களுக்கு கட்டுபாடுகள் விதிக்கப் படுகிறது. அன்னதானம் வழங்கு பவர்கள் இன்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை ஆட்சியர் அலு வலகத்தில் அனுமதி பெற வேண்டும். கிரிவலப் பாதையில் உணவுகள் சமைக்கக் கூடாது. தயாரிக்கப்பட்ட தரமான உணவு களை மட்டுமே அன்னதானமாக வழங்க வேண்டும்.

அனுமதி பெற்ற பிறகே கிரிவலப் பாதையில் கடைகள் அமைக்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE