சென்னையில் ஏற்கெனவே 203 அம்மா உணவகங்கள் உள்ளன. தற்போது மேலும் 200 அம்மா உணவகங்கள் தொடங்க உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக் கிழமை நடந்த மாமன்ற கூட்டத் தில் அறிவிக்கப்பட்டதாவது:
வார்டுக்கு ஒன்று வீதம் 200 உணவகங்களும், அது தவிர ராஜீவ் காந்தி அரசு மருத்துவ” மனை, ஸ்டான்லி மருத்துவமனை, மற்றும் எழும்பூர் அரசு மருத்துவ மனை ஆகியவற்றிலும் அம்மா உணவகங்கள் இருக்கின்றன.
தற்போது ஒவ்வொரு வார்டிலும் மேலும் ஒரு அம்மா உணவகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதே போன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனை மற்றும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும் அம்மா உணவகம் அமைப்பதற்கான உள்கட்ட மைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அம்மா உணவக ஊழியர் களுக்கான விபத்து சிகிச்சைக் கான தொகையை மாநகராட்சி வழங்கும் என மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இது சம்பந்தமாக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக 2,400 பேரும், சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2,436 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த பெண்களுக்கு தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்த திட்டத் தின் மூலம் வழங்க முடியாத சூழ்நிலையில், மாநகராட்சியே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான தொகையை வழங்கும். 15 நாட்கள் சிகிச்சை காலம் கொண்ட சாதாரண விபத்துகளுக்கு ரூ.10 ஆயிரம், 30 நாட்கள் சிகிச்சை காலம் கொண்ட பெரிய விபத்துகளுக்கு ரூ.25 ஆயிரம், 30 நாட்களுக்கு மேல் சிகிச்சை காலம் கொண்ட அறுவை சிகிச்சை விபத்துகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை வழங்கப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago