வில்லிவாக்கம் மேம்பாலம் அமைக்க ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை: ஸ்டாலின் தகவலுக்கு மாநகராட்சி விளக்கம்

By செய்திப்பிரிவு

வில்லிவாக்கம் ரயில்வே மேம் பாலம் அமைக்க ரயில்வே பட்ஜெட்டில் ரூ.7.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஜனவரி மாதம் மத்திய ரயில்வே அமைச்சரிடம் தான் வைத்த கோரிக்கையை ஏற்று ரயில்வே பட்ஜெட்டில், வில்லி வாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.7 கோடி 35 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா வெளியிட்ட உத்தரவின் பேரில் வில்லிவாக்கத்தில் மேம்பாலம் அமைக்க ரயில்வே துறையை கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 2005-06 நிதியாண்டில் தென்னக ரயில்வே மேற்கொள்ள உள்ள பணிகளின் பட்டியலில் இத்திட்டம் சேர்க்கப்பட்டு ரூ.7 கோடி 35 லட்சம் ஒதுக்கப்பட்டது.

பிறகு இதுதொடர்பாக ஸ்டுப் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் அளித்த அறிக்கையில் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் 2012-13 நிதிநிலை அறிக் கையில் இத்திட்டம் மேற்கொள்ளப் படும் என்று ஜெயலலிதா அறிவித் தார்.

இத்திட்டம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில், தொடக்க திட்ட ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் அளித்தல், மண் பரிசோதனை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தல், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் என பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டம் ரத்தாகாமல் தொடர்ந்து ரயில்வே திட்ட பட்டியலில் தொடர்வதற்காக ரயில்வே பட்ஜெட்டில் சில லட்சங்கள் வருடா வருடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ரயில்வே பட்ஜெட் அறிவிப் பில் ரூ.7 கோடி 35 லட்சம் ஒதுக்கப்பட வில்லை. இதுபற்றி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மையில்லாதது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்