பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தமிழக பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு உயிரிழந்த ஸ்வாதி யின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு குறிவைத்து சில தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி யுள்ளதாக மத்திய அரசின் உளவுத் துறை மூலமாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சென்னைக்கு அருகி லுள்ள காளஹத்தி சிவாலயத்துக்கு மோடி வருகை தர உள்ள நிலையில் பாகிஸ்தான் உளவாளி ஜாஹீர் உசேன் கைது செய்யப்பட்டதும், சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகத் தெரிகிறது.
இந்தக் குண்டுவெடிப்பை தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைத்து, சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வேண்டும். பலியானவரின் குடும்பத்துக்கு அரசு வேலையுடன் ரூ.10 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சையும் தரவேண்டும்.
இந்த பையில் வைத்து வெடிகுண்டுகள் எடுத்துவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago