மார்ச் 20 - உலக சிட்டுக்குருவிகள் தினம்
உலக அளவில் அழிந்துவரும் அரிய வகை பறவை இனங்களில் சிட்டுக்குருவியும் சேர்ந்துள்ளது. சிட்டுக்குருவிகளைக் காக்க கிருஷ்ணகிரியில் நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு 100 கிராமங்களில் வீடுகள் தோறும் சிட்டுக்குருவிகள் வளர்க் கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் சிட்டுக்குருவிகள்தான், எங்கு திரும்பி னாலும் கீச்.. கீச்.. சப்தம்தான். என்ன ஆச்சரியமாக உள்ளதா.. அத்தனையும் உண்மை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்படும் டிவிஎஸ் நிறுவனத்தின், சீனிவாசன் அறக்கட்டளை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஓசூர், தளி மற்றும் கர்நாடக மாநில எல்லையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் சிட்டுக்குருவிகள் வளர்க்க தனித்தனியாக கூடுகள் வழங்கி கிராம மக்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். குருவிகள் மனிதர் களோடு இணைந்து ஆனந்தமாக வாழ்கின்றன.
‘கீச் கீச்' என்று கத்திக் கொண்டு தானியங்களைக் கொத்தித் தின்றபடி, சட்டென்று சிறகடித்து பறக்கும் அதன் அழகைக் காண, கண்கள் கோடி வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு அந்த வாய்ப்புகள் குறைவே.
உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் சிட்டுக்குருவிகள் அதிகளவில் இருந்தன. தற்போது உலக அளவில் அழிந்துவரும் அரிய வகை பறவை இனங்களில் சிட்டுக்குருவியும் உள்ளது. பொது வாக மனிதர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும், வயல்வெளிகளிலும் சிட்டுகுருவி கள் காணப்படுகின்றன. நகரங் களைபோல் கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் அதிகரிப்பு, விளைநிலங்கள் வீட்டு மனைகளாக் கப்பட்ட காரணத்தால் சிட்டுக்குருவி களுக்கான வாழ்விடம், இரை தேடுமிடங்கள் சுருங்கிவிட்டன.
சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாள் 13 ஆண்டு. இந்த குருவிகள் வனப்பகுதிகளில் வாழ்வதைவிட, மனிதர்களுடன் நெருங்கி இருக் கவே விரும்புகின்றன. செல்போன் கோபுரம் கதிர்வீச்சால் குருவிகள் அழிந்து வருவதாக கூறுவது உண்மையல்ல என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். குருவி கள் வாழ்வதற்கான இருப்பிடம் இல்லாமல் போனதும், வயல்வெளி களில் பயிர்களுக்கு ரசாயனம் தெளிப்பு அதிகரிப்புமே காரணம். குருவிகள் முட்டை இடுவதற்காகவே கூட்டை தேடுகிறது.
குருவிகள் தானியங்கள் மற்றும் சாக்கடையில் உள்ள புழுக்களை விரும்பி உண்ணுகின்றன. வீடுகளில் இந்த குருவிகள் வசித்தால், குடும்பம் ஆலமரம் போல் விருத்தியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் கிராம மக்களும் குருவி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சீனிவாசன் அறக் கட்டளை களப் பணியாளர் துரையன் கூறியதாவது: ஓசூர் வட்டத்தில் கும்மளாபுரம், கொத்தகொண்டப் பள்ளி, முத்தூர், தளி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மொத்தம் 236 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது 80 கிராமங்களில் வைக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியில் 44 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 20 கிராமங்களில் சிட்டுக்குருவி கூடு வைக்கப்பட்டுள்ளது. 100 கிராமங் களில் மொத்தம் 10 ஆயிரம் வீடுகளில் குருவிகள் தங்குவதற்கான அட்டை கூடுகள் வைக்கப்பட்டுள்ளன.
சிட்டுக்குருவிகளை அழிந்துவரும் பறவை இனங்களில் ஒன்றாக அரசு வகைப்படுத்தி உள்ளது. சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கிராம மக்கள், பள்ளி குழந்தைகள் மத்தியில் சிட்டுக்குருவி களை வளர்க்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தி சிட்டுக்குருவி இனத்தைப் பெருக்கி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
வளர்க்கும் முறை
ஒரு சிறிய அட்டைப் பெட்டியில் வைக்கோலை அடைத்து, வீட்டு வராந்தாவிலோ, பால்கனியிலோ, மரத்திலோ தொங்கவிடலாம். இந்தப் பறவையின் குளியலுக்காக வீட்டுக்குள் ஒரு சிறிய கிண்ணத்தில் நீர் வைக்கும் பட்சத்தில் குருவிகள் தானாகவே கூட்டைத் தேடி வரும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago