கோயில் நிலங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை: அரசுக்கு இராம கோபாலன் கோரிக்கை

கோயில் நிலங்கள், கட்டிடங்கள் அரசின் வேறு துறைகளுக்கும், தனியாருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக பட்ஜெட்டில் 206 கோயில் களில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்த உள்ளதாகவும், 250 கோயில்கள் புனர் நிர்மாணம் செய்ய ரூ.90 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள் ளது. அரசின் பிடியிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் உள்ள அசையும், அசை யாச் சொத்துக்கள் பற்றிய முழுமையான பட்டியல் வெளியிட வேண்டும். அதனை ஒவ்வொரு ஆண்டும் தணிக்கைக் குழுவால் மக்கள் பிரதிநிதிகள் முன்பு சரி பார்க்கப்பட வேண்டும். கோயில் சொத்துக் களில் குத்தகை, வாடகை பாக்கி வைத்துள் ளோர் பட்டியல் வெளியிடப்பட்டு, அவை உடனடியாக வசூலிக்கப்பட வேண்டும்.

அனைத்துக் கோயில்களுக்கும் அன்ன தானத்துக்கு வேண்டிய அரிசியையாவது தமிழக அரசு வழங்க வேண்டும். எதனாலும் பக்தர்களை பாகுபாடு படுத்தாமல், கோயில் களிலுள்ள எல்லாவித தரிசனக் கட்டணங் களையும் நீக்க வேண்டும். கோயில்களின் புனிதங்களைக் கெடுக்கும் வண்ணம் திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் படம் பிடிப்பதை தடுக்க வேண்டும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE