மாரியப்பா நகரில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத்திடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியரான பன்னீர்செல்வம் மாரியப்பா நகர் 2-வது தெற்கு குறுக்குத் தெருவில் உள்ள தனது வீட்டை அண்ணாமலைப் பல் கலைக்கழக ஊழியர் அருள்பிர சாத் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
இந்த வீட்டில் சனிக்கிழமை நாட்டு வெடிகுண்டு வெடித்த தில் பிரபல ரவுடி மோகன்ராம் பலத்த காயமடைந்தார். அவர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.
என்ன காரணம்?
சம்பவம் நடந்த இடத்தில், வெடிக் காத டிபன் பாக்ஸ் குண்டு களையும், கைத் துப்பாக்கி ஒன்றை யும் , கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் சிதம்பரம் போலீஸார் கைப்பற்றினர்.
மோகன்ராமிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சிதம்பரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி குமார் என்பரைக் கொலை செய்யும் நோக்குடன் வந்ததாகத் தெரியவந்தது. அதற்காக வெடி குண்டு தயாரித்த போது, எதிர் பாராதவிதமாக குண்டு வெடித்த தாக மோகன்ராம் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக ஊழியரிடம் விசாரணை
இதனிடையே மோகன்ராம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தங்க இடம் அளித்த அருள் பிரசாத்தை ஞாயிற்றுக்கிழமை பிடித்த போலீஸார், அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருளிடம் நடத்திய விசாரணை யில் தெரியவந்த தகவல்கள்:
சிதம்பரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சந்திரனும் மோகன்ராமும் கோவை சிறையில் இருந்தபோது நண்பர்களாகினர். சிறையை விட்டு வெளியே வந்ததும், சந்திரனின் தம்பி ஹரிமோகன்ராமுக்கு அறிமுகமானார். சந்திரன் இரு வருடங்களுக்கு முன் மர்மமாக இறந்து விட, மோகன்ராமுக்கும், ஹரிக்கும் இடையேயான நட்பு தொடர்ந்தது.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் குமார் என்பவருக்கும், ஹரிக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குமாரைக் கொலை செய்ய மோகன்ராமின் உதவியை ஹரி நாடியுள்ளார். மோகன்ராமை வரவழைத்து தங்கவைத்து, குமாரைக் கொலைசெய்ய திட்டம் தீட்டினர். ஹரியின் அத்தை மகன் சுரேந்தர் என்பவர் மூலம் அருள் பிரசாத், ஹரிக்கு அறிமுகமானார்.
மோகன்ராம் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை வரவழைத்து, அருள்பிரசாத் வாடகைக்கு இருக்கும் குடியிருப்பு வளாகத்தில் ஒரு மாதத்திற்கு முன் தங்க வைத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
பாமக-வினர் கண்காணிப்பு
சம்பவம் நடந்த வீட்டிலிருந்து சில அடையாள அட்டைகள் கிடந்தன. அதில் சங்கர்லால், ராஜேஷ்கண்ணன், பாஸ்கர் ஆகியோருடைய பெயர்கள் இருந்தன. அவர்கள் தலைமறைவாக இருப்பவர்களாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேக்கின்றனர். இச்சம்பவத்தில் பாமக நிர்வாகிகள் சிலருக்கு தொடர்பிருப்பதாகக் கருதும் போலீஸார் அவர்களையும் கண்காணித்து வருகின்றனர். இதையறிந்த பாமக நிர்வாகிகள் சிலர் தலைமறைவாகிவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago