என்எல்சி மின்சாரம் உற்பத்தியாவதில் சிக்கல்: கோடையில் தமிழகத்துக்கு உரிய பங்கு கிடைக்குமா?

By எஸ்.சசிதரன்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கவுள்ள 2 அலகுகளின் சோதனை ஓட்டத்தில் எதிர்பார்த்த உற்பத்தி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோடையில் எதிர்பார்த்தபடி அங்கிருந்து மின்சாரம் கிடைக்குமா என்று மின்வாரியத்தினர் கவலை யடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதனால், வீடுகளில் மின் பயன்பாடு உயர்ந்து, மின் தேவையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. கடந்த ஆண்டில், கோடைகாலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் அதிகபட்சமாக 13,475 மெகாவாட் மின்தேவை ஏற்பட் டது. நடப்பு ஆண்டில் இது 15 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளாக கோடை காலத்தில் மின்வெட்டு நிலவிவரும் நிலையில், இந்த ஆண்டு அதை மாற்றிக்காட்டுவதற்கு மின்வாரியம் உறுதியாக உள்ளது.

மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தின் (என்எல்சி) மூலமாக கூடுத லாக சுமார் 500 மெகாவாட் மின்சாரம் கோடைக்குக் கிடைக் கும் என்று மின்வாரியம் எதிர்பார்த் திருந்தது. ஆனால், தற்போது, எதிர்பார்த்த அளவுக்கு அங்கிருந்து கிடைக்குமா என்று மின்வாரியத்தினர் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து மின்வாரியத்தினர் தெரிவித்ததாவது: தமிழக மின்வாரி யமும், என்எல்சி-யும் இணைந்து தூத்துக்குடியில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் உடைய அனல்மின் நிலையத்தை அமைத்துள் ளன. அங்கு பணிகள் முடிந்து சோதனையோட்டம் தொடங்கியுள்ளது.

இதன்மூலம் 380 மெகாவாட்டை தமிழகத்துக்கு என்எல்சி தரவேண்டும். எனவே கோடைக்குள் அது தமிழகத்துக்குக் கை கொடுக்கும்.

ஆனால், என்எல்சி-யின் மற் றொரு திட்டத்தின் மூலம் நமக்கு கிடைக்கவேண்டிய சுமார் 125 மெகாவாட் மின்சாரம் கிடைக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

நெய்வேலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தலா 250 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட இரு விரிவாக்க அலகு களின் (500 மெகாவாட்) பணி முடிந்து சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. இந்த இரு அலகுகளிலும், நிலக்கரி யைப் பயன்படுத்துவதில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட் டுள்ளது.

இப்புதிய முயற்சியால் எதிர்பார்த்த அளவுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. எனவே, அங்கி ருந்து தமிழகத்தின் பங்காக கிடைக்க வேண்டிய 125 மெகாவாட் மின்சாரம், கோடைக்கு கிடைக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்