அரசு அலுவலகங்களை சுத்தம் செய்ய கோமியம் பயன்படுத்துவது சாத்தியமற்றது: மத்திய அமைச்சர் கருத்துக்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

அரசு அலுவலகங்களை சுத்தம் செய் யும்போது, பினாயில் பயன்படுத்து வதைவிட கோமியத்தால் தயாரிக் கப்படும் திரவியத்தை பயன்படுத் தினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, மற்ற துறைகளுக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

அமைச்சர் கூறியது நடைமுறை சாத்தியமில்லை என்றும், இது பாஜகவின் அரசியல் தந்திரம் என்றும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறுகின்றனர். அவர் கள் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம். துரைபாண்டியன்:

இந்தக் கருத்தை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி களிடம் இருந்து எதிர்பார்க்கலாம். ஆனால், மத்திய அமைச்சரே கூறுகிறார் என்றால் ஒட்டுமொத்த அமைச்சகமே ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை அமல்படுத்தத்தான் முயல்கிறது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற கருத்துகளை தெரி விப்பதற்கு முன்பு அரசு அலுவலகங் களில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்களின் நிலை குறித்து முதலில் யோசிக்க வேண்டும்.

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் ஜே.கணேசன்:

மஞ்சள், கோமியம் ஆகியவற்றை பாரம்பரியமாக கிருமிநாசினிகளாக பயன்படுத்தி வந்துள்ளோம். இப்போதும் ஒரு சில தினங்களில் மட்டும் வீடுகளில் கோமியம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தினந்தோறும் இதை பயன்படுத்துவது என்பது நடைமுறை சாத்தியமற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர். தமிழ்ச்செல்வி:

தமிழகத்தில் சுமார் ஆயிரம் அரசு அலுவலக வளாகங்கள், 10 ஆயிரம் அலுவலக கட்டிடங்கள் உள்ளன. பல அலுவலகங்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. குறைந்தபட்சம் பினாயில் பயன்படுத்திதான் சுத்தம் செய்து வருகின்றனர். திடீரென்று அனைத்து அலுவலகங்களிலும் கோமியம் பயன்படுத்துவது சாத்தியமில்லாதது.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் ஆர்.ஷண்முகராஜன்:

முதலில் துப்புரவு ஊழியர்களை அரசு நியமிக்க வேண்டும். அனைத்து துப்புரவு ஊழியர்களும் தனியார் மூலம் நியமிக்கப்படுவதால் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளம் ரூ.330-க்கு பதில் ரூ.240 தான் கிடைக்கிறது. அவர்களுக்கு நீளமான கையுறைகளும், பூட்ஸ் காலணிகளும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சங்க அகில இந்திய தலைவர் கே.கணேசன்:

சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றால் இத்தனை ஆண்டுகள் இதுபற்றி ஏன் கூறவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தைரியமாக இதுபோன்ற கருத்துகளை பேசி வருகின்றனர். இதில் ஏதோ உள் நோக்கம் இருக்கும் என்று தோன்றுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE