எண்ணூர் விரைவுச்சாலை துறைமுகத்தை இணைக்கும் முக்கியச் சாலையாகும். எனவே, பெரிய லாரிகள், ட்ரக்குகள் இந்த சாலையை பயன்படுத்தும். எண்ணூர் விரைவுச்சாலையில் துறைமுகம் நுழைவுவாயிலின் அருகிலிருந்து மணலி நெடுஞ்சாலை வரை 6.3 கி.மீ தூரத்துக்கு 150 வாட் எல்.இ.டி.விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4.5 கோடி நிதி அளிக்கிறது.
விபத்துகள், வழிப்பறி சம்பவங் களை குறைக்கும் விதமாக இந்த விளக்குகள் அமைக்கப்படுகின்றன. ராயபுரத்தில் வசிக்கும் நல்லதம்பி கூறும்போது, “ எண்ணூர் விரைவுச்சாலையில் இரு சக்கர வாகன விபத்துகள் அதிகம் நடைபெறுகின்றன. இந்த சாலை துறைமுக இணைப்புக்கு முக்கிய மான சாலையாக இருந்தாலும் எஸ்.பி.ஐ காலனி, பட்டினத்தார் கோயில், காமதேனு நகர், மஸ்தான் கோயில் என பல குடியிருப்பு பகுதி மக்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்” என்றார். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இந்த திட்டத்துக்கான நிதி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 87 லட்சம் செலவில் 74 எல்.இ.டி.விளக்குகள் அமைப்பதற்கு டெண்டர்கள் விடப்படவுள்ளன” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago