டெல்டா பகுதிகளில் மூடுபனிக்கு சூரியப் புள்ளிகள்தான் காரணமா?- ஆய்வு நடப்பதாக சூரியவியல் விஞ்ஞானி தகவல்

டெல்டா மாவட்டங்களில் நிலவும் மூடுபனிக்கு, சூரியப்புள்ளிகள் அதிகரித்து வருவதுதான் காரணமா என்று கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் மூடுபனி நிலவுகிறது. இது, பருவநிலை மாற்றத்தை உணர்த்து கிறதா அல்லது புவி வெப்ப மயமாதலால் ஏற்பட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய மண்டல இயக்குநர் ரமணன் கூறியதாவது:

காற்றில் ஈரப்பதம் மிக அதிக மாக இருந்தால் மூடுபனி உரு வாகும். ஒரு கி.மீ.க்கு குறைவான தூரத்துக்குள் உள்ள பொருட் கள் நம் கண்ணுக்கு தெரிந்தால் அது சாதாரண பனி. அப்படி தெரியவில்லை என்றால் அதை மூடுபனி என்று அழைக் கிறோம். வெப்பம் குறையும் போது ஈரப்பதத்தை தக்கவைத் துக்கொள்ளும் திறன் குறையும். அப்போது உபரியாக உள்ள நீர் ஆவியாகி பனியை உண்டு பண்ணும்.

மூடுபனி எப்போது வேண்டுமா னாலும் வரும். இது ஈரப்பதத்தை பொறுத்தது என்பதால் குறிப்பிட்ட காலத்தில்தான் வரவேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது. டெல்டா பகுதிகளில் மரங்கள் அதிகமாக இருக்கிறது. கடலும் அருகிலேயே உள்ளது. நீராவி போக்கினால் அதிகபடியான உபரி நீர் உருவாகிறது. இரவில் வானம் தெளிவாக இருக்கிறது. நீராவி போக்கினால் உபரிநீர் உண்டாகி குளிர் அதிகரிக்கிறது.

மார்ச் மாதம், கோடைக்காலம் கிடையாது. எனவே, இதை கோடையில் உருவாகிற மூடுபனியாக கருதக்கூடாது. மே மாதத்தில்தான் கோடை வருகிறது.

இவ்வாறு ரமணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்தின் சூரியவியல் ஆராய்ச்சியாளர் குமர வேலு, ‘தி இந்து’விடம் கூறியது:

ஈரப்பதத்தால்தான் மூடுபனி உருவாகிறது. தஞ்சாவூர் போன்ற பகுதிகள் கடலின் அருகில் உள்ளன. ஆற்றுப்படுகைகளும், தாவரங்களும் நிரம்பிய பகுதி என்பதால், காற்றில் ஏற்படும் ஈரப் பத்தால் மூடுபனி உருவாகியுள்ளது. இந்த மூடுபனி, பிப்ரவரி மாதத் திலேயே வந்திருக்க வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு முறை பருவநிலை மாற்றம் ஏற்படும்போது இப்படி பனிப்பொழிவு ஏற்படும்.

தாமதத்துக்கு புவி வெப்பமயமாதலையும் காரண மாக சொல்லலாம். மேலும் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியப்புள்ளிகள் அதிக மாகிக்கொண்டே போகின்றன. இதனால் பூமியில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இந்த தருணத்தில்தான் குறிஞ்சிப் பூ பூக்கிறது. எனவே, இதன் காரணமாக மூடுபனி வந்ததா என்றும் ஆய்வுகள் செய்து வருகிறோம்.

இவ்வாறு குமரவேலு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE