தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: பிரச்சினை கிளப்ப எதிர்க்கட்சிகள் தீவிரம்

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அதிகாரி தற்கொலை, டெல்டா விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நிதித் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய உரையில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக் கப்படவில்லை. நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பட்ஜெட்டிலும் புதிய திட்டங்கள் இடம்பெறவில்லை. கடந்த 1991-க்குப் பிறகு அதிமுக ஆட்சியில், ஜெயலலிதா இல்லாமல் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படு கிறது. இந்தச் சூழலில் மாநில அரசின் பட்ஜெட்டிலாவது புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதேவேளையில், வேளாண் அதிகாரி தற்கொலை, பிளஸ் டூ வினாத்தாள் வெளியானது, கர்நாட கத்தைக் கண்டித்து விவசாய சங்கங்கள் நடத்தும் முழு அடைப்புப் போராட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத் தத்துக்கு அதிமுக ஆதரவு அளித்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சட்டப் பேரவையில் கிளப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டுள்ளதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சி னைகளை சமாளிக்க ஆளுங் கட்சி தரப்பிலும் தயாராகி வருகின்றனர்.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அமளியில் ஈடுபட்ட தால் தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரையும் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட் டார். இதனால், எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தை தவிர, மற்ற தேமுதிக எம்எல்ஏக்கள் யாரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாது. இந்நிலை யில், விஜயகாந்த் மட்டும் கூட்டத் தொடரில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் பிரச்சினை குறித்தும் சட்டப் பேரவையில் முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்