உளுந்தூர்பேட்டை அருகே பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்முகம்மது(45). கடந்த 1-ம் தேதி வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வந்ததில் இருந்து அவர் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். இதற்காக, ராஜ் முகம்மது, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர், புதுச்சேரி ஜிப்மர் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. பன்றி காய்ச்சலால் ராஜ்முகம்மது இறந்ததாக ஜிப்மர் மருத்துவ மனையின் இறப்பு அறிக் கையில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து ராஜ்முகம்மது வுடன் மருத்துவமனையில் இருந்தவர்கள், சடலத்துடன் இருந்தவர்கள், துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்