நடிகை சங்கீதா உட்பட பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னைப் பலவழிகளில் துன்புறுத்திய தாலேயே வழக்குத் தொடர்ந்தேன் என்று உஷா சங்கர நாராயணன் கூறியுள்ளார்.
பிரதமரிடம் ஆலோசகராகப் பணியாற்றிய உஷா சங்கர நாராயணன் சென்னை வளசர வாக்கம் ஜானகி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் 4 தெரு நாய்களை வளர்த்து வருகிறார். அந்த நாய்களால் தங்களுக்கு தொந்தரவு இருப்ப தாகவும், அதனால் வீட்டைக் காலி செய்யுமாறும் நடிகை சங்கீதா உள்ளிட்ட சிலர் மிரட்டியதாக உஷா போலீஸில் புகார் கொடுத்திருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தான் பொய் புகார் கொடுக்கவில்லை என்று உஷா நாராயணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நான் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆகி யோரிடம் ஆலோசகராகப் பணியாற்றி யுள்ளேன். டெல்லியில் பணி யாற்றிய நான் உடல் நலக் குறைவு காரணமாக தற்போது சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கிறேன். இந்த வீட்டுக்கு வந்து மூன்றரை மாதங்கள்தான் ஆகிறது. தெரு நாய்களை பாசத்துடன் வளர்த்து வருகிறேன். என் வீட்டு நாய் பக்கத்து வீட்டு நாயைப் பார்த்து குரைத்ததாக அவர்கள் குறைகூறினர். அப்படி ஆரம்பித்த பிரச்சினை இப்போது பெரிதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எதிர்வீட்டில் வசிக்கும் நடிகை சங்கீதா, அவரது கணவர் கிரிஷ் ஆகியோர் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். அதோடு வீட்டைக் காலி செய்யாவிட்டால் நாய்களை எரித்துக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். நான் வளர்க்கும் நாய்கள் சிறுமி ஒருவரைக் கடித்துவிட்டதாகவும், தெருவில் நடந்து செல்வோரையும், பக்கத்து வீட்டினரையும் கடிக்க வருகிறது என்றும் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீஸாரும் என்னிடம் வந்து விசாரித்தனர். நாயால் கடிபட்ட சிறுமி சிகிச்சை எடுத்ததற்கான மருத்துவ ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பிக்காததால் புகாரில் உண்மை இல்லை என்று சொல்லி போலீஸார் வழக்கை முடித்தனர்.
அதையடுத்து மாநகராட்சி ஆணையரிடம் புகார் கொடுத்தனர். ஆணையர் உத்தரவின்படி, மாநகராட்சி அதிகாரிகள் என் வீட்டுக்கு வந்து நாய்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பார்த்து திருப்தி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டனர்.
ஏன் நாய்களைப் பிடிக்காமல் செல்கிறீர்கள்? என்று மாநகராட்சி அதிகாரியிடம் நடிகை சங்கீதா உள்ளிட்டவர்கள் கேட்டனர். அதற்கு ‘தெருவில் சுற்றித்திரியும் நாய்களைத்தான் நாங்கள் பிடித்துச் செல்ல முடியும். வீட்டில் வளர்க்கப்படும் தெருநாய்கள் நல்ல நிலையில் இருந்தால் அவற்றைப் பிடித்துச் செல்ல முடியாது’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர்.
அதன்பிறகும் பக்கத்து வீட்டுக் காரர்கள் என்னைப் பலவழிகளில் துன்புறுத்தினார்கள். அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தேன். நீதிபதி சி.டி. செல்வம் இந்த வழக்கை விசாரித்து, ‘‘உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார். அதன்படி வளசரவாக்கம் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே இப்பிரச்சினை குறித்து கடந்த மார்ச் 8-ம் தேதி மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தேன். அதில் மூன்று தடவை விசாரணை நடந்துள்ளது. இவ்வாறு உஷா சங்கர நாராயணன் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago