கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தமானது: இல.கணேசன் கருத்து

கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்த மானது. அதை மீட்க வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்றுக் கருத்தில்லை என்றார் அக்கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசன்.

பொற்றாமரை இலக்கிய அமைப்பின் சார்பில் நாகப்பட்டி னத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச் சிக்காக வந்திருந்த அவர் செய்தி யாளர்களிடம் மேலும் கூறிய தாவது: இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது நாடாளுமன்ற உறுப் பினர்களுடன்கூட விவாதிக்காமல் கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார். அப்போது அதை எதிர்த்து வாதாடியவர் வாஜ்பாய். அதற்காக வழக்கு தொடர்ந்தவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி.

கர்நாடகத்துக்கும் தமிழகத் துக்கும் காவிரி நீரை பங்கீடு செய்வதில் நிலவும் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதற்கான நடவடிக்கையாக இந்த பட்ஜெட்டில் நதிநீர் இணைப் புக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. அதிலும் முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆந்திராவின் கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைத்து அதை ஒகேனக்கல்லில் கொண்டு வந்து காவிரியுடன் சேர்த்து விட்டால், ஆண்டு முழுவதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து வரும். இதனால் தமிழகத்தின் நீர் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

தமிழக மீனவர்கள் ஆழ் கடல் மீன் பிடிப்பையும், தடை செய்யப் பட்டவலைகளை பயன்படுத்தாம லும் சமதளபரப்பில் மீன் பிடிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை யின்போது இலங்கை மீனவர்கள் வைத்த கோரிக்கையை, தமிழக மீனவர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE