தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ் தான் உளவாளிகள் அருண் செல்வராசன், தமீம் அன்சாரி ஆகியோர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 4,010 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத் தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (28) என் பவரை கடந்த 2012-ம் ஆண்டு செப்டம் பரில் திருச்சி விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். குன்னூர் ராணுவப் பயிற்சிக் கல்லூரி, ரங்கம் ரங்கநாதர் கோயில் உட்பட பல இடங்களை படம் பிடித்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு அனுப் பியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் வீடு எடுத்து தங்கியிருந்த அருண் செல்வராசன்(34) என்பவரையும் தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்த னர். கலைநிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்போல செயல்பட்டு வந்த அருண் செல்வராசன், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உட்பட பல இடங்களை ரகசியமாக படம் பிடித்து ஐஎஸ்ஐ-க்கு அனுப்பியது தெரியவந்தது.
இவர்கள் இருவர் மீதான வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்பாளர் குமார் மற்றும் அரசு வழக்கறிஞர் பிள்ளை ஆகியோர் இணைந்து தமீம் அன்சாரி, அருண் செல்வராசன் ஆகியோர் மீது 4,010 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
தமீம் அன்சாரி, அருண் செல்வராசன் ஆகியோர் உளவு தகவல்களை சேகரிப் பதற்கு பயன்படுத்திய கருவிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் குறித்த விவ ரங்கள், சுமார் 130 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள், 127 ஆதாரங்கள், பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியதற் கான ஆதாரங்கள் போன்றவை உட்பட பல விவரங்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், ஜாமீன் வழங்கக்கோரி அருண் செல்வராசன் தாக்கல் செய்த மனு நாளை (9-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago