இளையராஜா பாடல் திருட்டு சிடிகள் விற்பனையை தடுக்க புகார் மனு

By செய்திப்பிரிவு

இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவான பாடல்களின் திருட்டு சிடிகள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தாணு மற்றும் நிர்வாகிகள் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று பிற்பகலில் வந்து, திருட்டு சிடி தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் ஜெயலட்சுமியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

முழு உரிமை உள்ளது

அந்த புகாரில், ‘இசை யமைப்பாளர் இளைய ராஜாவின் இசையில் உருவான பாடல்களின் முழு உரிமையும் அவரிடம்தான் உள்ளன.

ஆனால் அவரது அனுமதி இல்லாமல் பலர் பாடல்களை சிடியாக தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிடிக் கடைகளில் இளையராஜாவின் பாடல்கள் திருட்டு சிடியாக விற்பனை செய்யப்படுகின்றன. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்