பல்கலை.க்கு திறமை அடிப்படையில் நிதி: புதுச்சேரி மாநாட்டில் மானியக்குழு துணைத் தலைவர் தகவல்

பல்கலைக்கழகங்களுக்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு திறமை அடிப்படையில் நிதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியக்குழு துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தென்னிந்திய அளவிலான துணைவேந்தர்கள் மாநாடு மற்றும் பயிற்சி பட்டறை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

மாநாட்டை புதுச்சேரி பல் கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் தேவராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநாட்டில் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பல்வேறு சமுதாயக் கல்லூரி முதல்வர்கள், கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் தேவராஜ் நிருபர்களிடம் கூறும்போது, விருப்பப் பாட தேர்வு முறைகளை அமல்படுத்துவது தொடர்பாக துணைவேந்தர்கள் மாநாடு முதன்முறையாக புதுச்சேரியில் நடத்தப்பட்டுள் ளது. மாணவர்களுக்கு வழங் கும் கல்வி தரமானதாக இருக்க வேண்டும் என்ற நோக் கத்தில் இந்த மாநாடு நடத்தப் படுகிறது.

கடந்த 60 ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களுக்கு பொது வளர்ச்சி நிதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு திறமைகள் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு நிதி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக அளவில் உள்ள முதல் 200 பல்கலைக்கழகங்களில் இந்தியா இடம்பெற வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிறந்த பல்கலைக்கழகங்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 35 பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்துள்ளன. இதில் 7 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு பெறும் எனத் தெரி கிறது. அவ்வாறு தேர்வு பெறும் பல்கலைக்கழகங்களுக்கு ரூ. 150 கோடி நிதி கிடைக் கும். திறமையான பல்கலைக் கழகங்களை உருவாக்க பல் கலைக்கழக மானியக்குழு தீவிர மாக உள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்