கும்மிடிப்பூண்டியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச ஓட்டுநர் பயிற்சி நிறுவன கட்டுமான பணி: அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

By செய்திப்பிரிவு

கும்மிடிப்பூண்டியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக் கப்பட்டு வரும் சர்வதேச ஓட்டுநர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கட்டுமான பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.

கும்மிடிப்பூண்டியில் சாலை போக்குவரத்து நிறுவ னத்துக்கு சொந்தமான 55 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத் தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் சர்வதேச அளவில் ஓட்டுநர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஓட்டு நர் திறன் தேர்வுதளம், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி உபகரணங் களுடன் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சர்வதேச தரத்துக்கு இணை யாக அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கு போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு பணிகளை மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது, போக்குவரத்து துறை செயலாளர் பிரபாகரராவ் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்