கிருஷ்ணகிரியில் பிளஸ் டூ தமிழ் தேர்வு: வினாத்தாள் நகலெடுத்த புகார் இணை இயக்குநர் விசாரணை

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 5-ம் தேதி நடந்த பிளஸ் டூ தமிழ் முதல்தாள் தேர்வு வினாத்தாளை தேர்வு மைய ஆசிரியை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. தேர்வு மைய அலுவலர் ஆசிரியை மணிமேகலை, பெற்றோர் ஆசிரியர் கழக ஊழியர் உமேரா உதவியுடன், வினாத்தாளை நகல் எடுத்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிஇஓ ராமசாமி, சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விளக்க கடிதம் பெற்று அவரை தேர்வு பணியிலிருந்து விடுவித்தார்.

நேற்று முன்தினம், கிருஷ்ணகிரிக்கு ஆய்வுக்கு வந்த அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்வு மையக் கண்காணிப்பு பொறுப்பாளரான, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குநர் நாகராஜ முருகன் விசாரணை நடத்தினார். ஆசிரியை மணிமேகலை, உமேரா, தலைமையாசிரியர் சின்னராஜ் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதனால் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் முறைகேடு நிரூபிக்கப்பட்டால் ஆசிரியை தற்காலிக பணிநீக்கம் செய்யப்படலாம் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்