மாட்டிறைச்சிக்குத் தடை: மகாராஷ்டிர அரசைக் கண்டித்து கோவையில் நூதன ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையைக் கண்டித்து கோவையில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தினர் திங்கள்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பு ஆதித் தமிழர் விடுதலை இயக்கம் இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் விடுதலை மணி தலைமை வகித்தார்.

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், மகாராஷ்டிர மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழைகள் அதிகம் பயன்படுத்தும் இந்த இறைச்சி பயன்பாட்டுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் அபராதம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனால் தலித், சிறுபான்மை மக்கள் பாதிப்படுவார்கள். இந்த தடையை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விடுதலை மணி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்