சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், "நேற்று முழுவதும் டிராபிக் ராமசாமி உணவு, தண்ணீரை புறக்கணித்துள்ளார். இங்கு கொண்டுவரும்போது அவர் சுயநினைவின்றி கிட்டத்தட்ட கோமா நிலையில் இருந்தார். அவருக்கு உரிய சிகிச்சை வழங்கினோம். இப்போது அவர் உடல்நிலை தேறி வருகிறார்" என்றனர்.
நேற்று முன்தினம் புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு சாலையில் நின்று பேட்டி அளித்தார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வீரமணி வேப்பேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், “டிராபிக் ராமசாமி தன்னுடன் வாக்குவாதம் செய்து தனது கார் கண்ணாடியை உடைத்துவிட்டார்” என்று தெரிவித்தார்.
புகாரின்பேரில் டிராபிக் ராம சாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago