வேடந்தாங்கலில் சிறுத்தைப் புலி நடமாட்டமா? - இல்லை என்று வனத் துறை உறுதி

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங் கலை அடுத்த குன்னகொளத்தூர் கிராமத்தில் வனப் பகுதியையொட்டிய ஏரிக்கரை அருகே சிறுத்தைப் புலி நடமாட்டம் உள்ளதாக பரவிய தகவலில் உண்மையில்லை. எனவே, மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றனர் வனத் துறையினர்.

வேடந்தாங்கல் வனப் பகுதியை யொட்டி குன்னகொளத்தூர் கிராமம் அமைந்துள்ளதால், அவ்வப்போது சிறிய காட்டு விலங்குகள் தண்ணீர் தேடி கிராமத்தையொட்டிய ஏரிக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில், அந்த ஏரிக்கரை அருகே சிறுத்தைப் புலி நடமாடியதாக தகவல் பரவியதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மதுராந்தகம் வனத் துறையினர், ஏரிக் கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டு, சிறுத்தைப் புலி நடமாட்டம் இல்லை என்று உறுதியளித்தனர்.

இதுகுறித்து மதுராந்தகம் வனச் சரகர் சிவபெருமான் கூறியதாவது:

சிறுத்தைப் புலி நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலின்பேரில் ஆய்வு மேற்கொண்டோம். செந்நாய், ஓநாய், காட்டுப்பூனை ஆகியவற்றின் கால்தடங்களை தவறாகக் கருதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு சிறுத்தைப் புலி நடமாட்டம் இல்லை என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்களிடையே அச்சம் நீங்கியது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்