குடிசைகளை காலி செய்ய 350 குடும்பங்களுக்கு மிரட்டல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

திருமுல்லைவாயில் பகுதியில் வசிக்கும் 350 குடும்பங்களை காலி செய்யுமாறு வலியுறுத்தி சிலர் மிரட்டி வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்று புகார் அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்டது திருமுல்லைவாயில்- நாகாத்தம்மன் கோயில் தெரு. இப்பகுதியில் உள்ள அனுமன் நகரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 350 குடிசைகளில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களை அங்கிருந்து இடத்தை காலி செய்ய சொல்லி சிலர் மிரட்டுவதாக பொதுமக்கள் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பொதுமக்கள் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆவடி பெருநகராட்சியின் 8-வது வார்டில் அமைந்துள்ள அனுமன் நகரில் 3 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 350 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின் இணைப்பு உள் ளிட்டவற்றை அரசு வழங்கி வருகிறது. வரிகளை நாங்கள் முறையாக செலுத்தி வருகிறோம்.

இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், எங் களை இப்பகுதியிலிருந்து காலி செய்ய சொல்லி மிரட்டி வருகின் றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப் பதோடு, எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE