அடையாறில் மின்சார பெட்டியில் திடீர் தீ

By செய்திப்பிரிவு

அடையாறில் வேட்பு மனு தாக்கல் அலுவலகம் அருகே உள்ள மின்சார பெட்டியில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகத் தில் நாடாளுமன்ற தேர்தலுக் கான வேட்பு மனு தாக்கல் நடை பெறுகிறது.

செவ்வாய்க்கிழமை நல்ல நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ஏராளமான அரசியல் கட்சியினர் கூடியிருந்தனர். காலை 10.30 மணியளவில் மண்டல அலுவல கம் எதிரே உள்ள டிரான்ஸ் பார்மரில் இருந்து ஒரு வெடிச் சத்தம் கேட்டது. அதிலிருந்து தீப்பொறிகளும் கீழே விழுந்தன. பின்னர் அருகே இருந்த மின்சார இணைப்பு பெட்டியில் பயங்கர சத்தத்துடன் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. மூடி வைக்கப் பட்டிருந்த அந்த இருப்பு பெட்டிக் குள் இருந்து தீ ஜுவாலைகள் வெளியே வந்ததை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

இதுபற்றி தகவலறிந்து மின் வாரிய ஊழியர் ஒருவர் விரைந்து வந்து, டிரான்ஸ்பார்மரின் மின் சப்ளையை துண்டித்தார். அதன் பின்னரும் மின்சார இணைப்பு பெட்டியில் இருந்து தொடர்ந்து தீ எரிந்தது. சுமார் 15 நிமிட போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் வந்தது. மின்சார பெட்டியில் வந்த தீ என்பதால் பொதுமக்கள் யாரும் அதன் அருகே செல்லவில்லை. ஒரே ஒரு மின்வாரிய ஊழியர் மட்டும் தனியாக போராடி தீயை அணைத்ததை அனைவரும் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்