மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க சர்வதேச கடல் எல்லையை அடையாளம் காட்டும் தானியங்கி முறை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்கு சர்வதேச கடல் எல்லையை அடையாளம் காட் டும் தானியங்கி முறை என்ற புதிய திட்டம் குறித்த முழு விவரத்தை யும் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் எஸ்.ஞானேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

தமிழக மீனவர்கள் பிழைப் புக்காக மீன்பிடிக்கச் செல்லும் போது, சர்வதேச கடல் எல்லை யைத் தாண்டுவதாகக் கூறி அவர் களையும், அவர்களது படகுகளை யும் இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்குகின்றனர்.

இதனால், ஏராளமான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

படகுகளும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்களும் இலங்கை கடற் படையினரால் பறித்துச் செல்லப் படுகின்றன. பல மீனவர்கள் காணா மல் போயிருக்கிறார்கள். நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச் சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை எளிதாக அடை யாளம் காணும் வகையில் புதிய தானியங்கி முறையை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், “தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்கு சர்வதேச கடல் எல்லையை அடையாளம் காட்டும் தானியங்கி முறை குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இப்புதிய திட்டம் எப்போது அமல்படுத்தப்படவுள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்த எவ்வளவு காலம் தேவைப்படும் என்பன உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கையை ஜூன் 2-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இத்துடன் இவ்வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்