காஞ்சிபுரம் அடுத்த வையாவூரில் காலனி பகுதிக்கு போலீஸ் பாது காப்பு வழங்கக் கோரி அப்பகுதி பெண்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ் வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
இது குறித்து வையாவூர் காலனியைச் சேர்ந்த குமார் கூறிய தாவது: வையாவூர் கிராமத்தில் சாதி மோதலை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் ஒரு பிரிவைச் சேர்ந்த சிலர் செயல் பட்டு வருகின்றனர். இவர்கள்தான் காலனி மக்கள் மீது தாக்குதல் நடத்த இளைஞர்களை தூண்டி விட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் காலனியை சேர்ந்தவர்களை வெட்டினர். இதனால் பிரச்சினை பெரிதானது. இதன் எதிரொலியாக காலனி மக்கள் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு நிலவுகிறது.
இந்த மோதல் தொடர்பாக வையாவூரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேநேரம் காலனி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை. இந்த மோதல் விவகாரத்தில் போலீ ஸார் கைது செய்யலாம் என்ப தால் காலனியைச் சேர்ந்த ஆண் கள் அனைவரும் வெளியூர் சென்று விட்டனர்.
இதன் காரணமாக காலனி பகுதியில் பெண்கள் மட்டுமே பாது காப்பின்றி வசிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு ஊர்க்காரர்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் காலனி பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். இவ்வாறு அவர் கூறினார். மேலும், சாதி மோதலை ஊக்குவிக்கும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் நிலைமையை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் ஆக்கப்பூர்வமான நட வடிக்கை எடுத்து அப்பகுதியில் பதற்றத்தை போக்க வேண்டும் என்றும் இப்போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கை அடங்கிய புகார் மனு ஆட்சியர் அலுவலகத் திலும், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்திலும் காலனி பெண்கள் அளித்தனர்.
இதனிடையே “காலனியைச் சேர்ந்தவர்களை ஒரு பிரிவினர் அரிவாளால் வெட்டியுள்ளனர். அவர்கள் காலனிக்குள் புகுந்து தாக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் போலீஸார் காலனி பகு திக்கு பாதுகாப்பு நிற்காமல் ஒருதலைப்பட்சமாக ஊர்காரர் களுக்கு மட்டும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்” என்ற குற்றச்சாட்டு தலித் அமைப்புகள் மத்தியில் உள்ளது.
போலீஸார் விளக்கம்
இது குறித்து காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசந்திரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்ட பகுதி ஊருக்கும் காலனிக்கும் நடுவில்தான் உள்ளது. மோதல் ஏற்பட்ட பகுதியில் போலீ ஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒருதரப்புக்கு மட்டும் போலீஸ் பாது காப்பு போடவில்லை” என்றார் அவர்
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago