வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்காக புதிய அலகு அமைக்க எதிர்ப்பு: ஊரணம்பேடு கிராம மக்கள் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

வடசென்னை அனல் மின் நிலையத் தில் புதிதாக 3-வது அலகு அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊரணம்பேடு கிராம மக்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான வடசென்னை அனல் மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் அமைக்கப்பட்டுள்ள 2 அலகுகளில் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல்மின் நிலையத்தின் வளாகம் பொன்னேரி வட்டம் வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணம்பேடு பகுதி வரை அமைந்துள்ளது.

இந்நிலையில் அனல் மின்நிலைய வளாகத்திற்குள் வரும் ஊரணம்பேடு பகுதியில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 3-வதாக புதிய அலகு ஒன்றை அமைக்கும் பணியில் மின்சார வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று வடசென்னை அனல் மின் நிலைய ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள சமூகக் கூடத்தில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் ஊரணம்பேடு பகுதியில் 3-வது அலகு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊரணம்பேடு பகுதியில் பொதுமக்கள் நேற்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த அலகு அமைந்தால் ஊரணம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுச்சூழலும் விவ சாயமும் பாதிக்கப்பட்டு விவசாயி களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகும் என கிராம மக்கள் கூறு கின்றனர். எனவே புதிய அலகை அமைக்கக்கூடாது என்று வலியு றுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் ஊரணம்பேடு, செங்கழனிமேடு, ராஜாந்தோப்பு, கொக்குமேடு, வாயலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்