வறுமையில் வாடும் காங்கிரஸ் மூத்த தலைவர் தி.சு.கிள்ளிவளவனுக்கு ஜெயலலிதா ரூ.5 லட்சம் நிதியுதவி: வங்கியில் டெபாசிட் செய்து மாதந்தோறும் வட்டிப் பணம் கிடைக்க ஏற்பாடு

By செய்திப்பிரிவு

வறுமையில் வாடும் காங்கிரஸ் மூத்த தலைவர் தி.சு.கிள்ளிவளவனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ரூ.5 லட்சம் நிதியுதவி அளித் துள்ளார். அந்தத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்து, மாதந்தோறும் வட்டிப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அண்ணாவின் நெருங்கிய நண்பரும், மூத்த காங்கிரஸ் உறுப்பினருமான தி.சு.கிள்ளி வளவன், நோயுற்று வறுமையில் வாடுவதுடன், கவனிப்பாரின்றி தனிமையில் தவித்து வருகிறார் என்ற செய்தியை அறிந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மிகவும் வருத்த முற்றார்.

கிள்ளிவளவனின் துயர் துடைத்திடும் வகையில் அவரது பெயரில் ரூ.5 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய் யவும், அதிலிருந்து வரும் வட்டித்தொகையில் அவருடைய அன்றாடச் செலவுகளை செய்துகொள்வதற்கு ஏதுவாக மாதந்தோறும் பணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் உடனடி செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்கவும் ஆணையிட்டார்.

அமைச்சர்கள் நலம் விசாரிப்பு

அதன்படி, அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், பி.பழனியப்பன் ஆகியோர் சென்னை நுங்கம் பாக்கம் குளக்கரை சாலையில் உள்ள கிள்ளிவளவனின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித் தனர்.

ரூ.5 லட்சம் டெபாசிட் செய்து மாதந்தோறும் பணம் கிடைக்க ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ள தகவலையும் அவரிடம் தெரிவித்தனர். அத்துடன், உடனடி செலவுக்காக ரூ.5 ஆயிரத்தை வழங்கி ஆறுதல் கூறினர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்