மேகேதாட்டு நோக்கிச் சென்ற 1286 விவசாயிகள் மீது வழக்கு

தேன்கனிக்கோட்டையிலிருந்து கர்நாடக மாநிலம் மேகேதாட்டு நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த தடையைமீறிச் சென்ற 1286 விவசாயிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டு மற்றும் ராசி மணல் ஆகிய இரு இடங்களில் புதியதாக அணை கட்டும் முயற்சி செய்து வருகிறது. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை குழுவை அமைக்க கோரியும், காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் மேகேதாட்டுவில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய் தனர்.

இதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையிலிருந்து மேகேதாட்டு நோக்கி செல்ல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர்.

அப்போது, ஜவளகிரி சாலை வழியாக மேகேதாட்டு நோக்கிச் சென்ற விவசாயிகளை, காவல் துறையினர் தடுத்தனர். இத னால் விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீஸார், அனை வரையும் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணி யரசன் மற்றும் 95 பெண்கள் உட்பட 1286 விவசாயிகள் மீது தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேகேதாட்டு நோக்கி செல்ல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்