அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஐஸ்கிரீம் மற்றும் பாலடைக்கட்டி (பனீர்) மட்டும் தயாரிக்கக் கூடிய ஆலை விரைவில் பயன் பாட்டுக்கு வரவுள்ளது.
ஆவின் நிறுவனம் சார்பில் பால் சார்ந்த இனிப்புகள், மில்க் ஷேக், ஐஸ்கிரீம், பனீர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப் படுகின்றன.
இவை அனைத்தும் அம்பத்தூரில் உள்ள ஆவின் ஆலையில் தயாரிக்கப் படுகின்றன. இங்கு தயாரிக் கப்படும் பொருட்கள் மாநிலம் முழுவதும் உள்ள ஆவின் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு ஆயிரத்து 200 லிட்டர் ஐஸ்கிரீம் மற்றும் 100 கிலோ பனீர் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையிலேயே ஐஸ்கிரீம் மற்றும் பனீர் மட்டும் தயாரிக்கக் கூடிய புதிய ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.19 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இங்கு நாள்தோறும் 15 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் மற்றும் ஆயிரம் கிலோ பனீர் தயாரிக்கப்படும்.
இது குறித்து ஆவின் நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆவின் நிறுவனம் பால் சார்ந்த பொருட்களை அதிகளவில் தயாரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐஸ்கிரீம் மற்றும் பனீர் மட்டும் தயாரிக்கக் கூடிய ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான கருவிகளை வாங்க உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் புதிய பால் பொருட்கள் ஆலை பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago