ஏப்ரல் 30-ல் வேலை நிறுத்தம்: இந்திய சாலைப் போக்குவரத்து சம்மேளனம் முடிவு

ஏப்ரல் 30-ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்திய சாலைப் போக்குவரத்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் சாலைப் போக்குவரத்து சம்மேளன கூட்டம் இன்று நடந்தது. அதில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். ''சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2014 அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெறும். ஏப்ரல் 30 அன்று வாகனங்கள் இயங்காது.

மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய சட்டம் தனியார் மயத்துக்கு வழிவகுக்கும். போராட்டத்தில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸூம் பங்கேற்கிறது'' என சவுந்தரராஜன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE