கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை காங். நிர்வாகிகள் வலியுறுத்தல்

கட்சிக்குள் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் கார்த்தி சிதம்பரம் செயல்படுவதாகக் கூறி, அவர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதுகுறித்து காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலர் வீனஸ் மணி, துணைத் தலைவர் ராதாகிருஷ் ணன், முன்னாள் மேயர் வெங்கடா சலம் ஆகியோர் கூறியதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கோவை வந்தபோது, கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டதாக 6 பேரை, மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் கட்சியில் இருந்து நீக்கினார். அவர் கள் 6 பேரும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததால், கட்சி மேலிடம் மீண்டும் அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொண்டது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் கோவை வந்தபோது, கட்சியின் கோவை மாவட்டத் தலைவர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இப்படிச் சொல்ல அவருக்கு அதிகாரம் இல்லை. கட்சியில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். எனவே, கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மாநிலத் தலைமைக்கு வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE