குரூப் 1 அதிகாரிகள் 14 பேரை நீக்க கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் குரூப் 1 அதிகாரிகள் 14 பேரின் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை நரிமேடு வழக்கறிஞர் ஏ. கண்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2000-01ம் ஆண்டில் நடத்திய குரூப் 1 தேர்வில் டிஎஸ்பி, ஆர்டிஓ, துணைப் பதிவாளர்களாக 83 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களது நியமனம் செல்லாது என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டன. இதை எதிர்த்து 65 அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு தாரர்கள் நியமனத்தில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட்ட 83 பேரில் 14 பேர் மத்திய அரசு பணிக்கு சென்றுவிட்டனர். அதனால் ஏற்பட்ட 14 காலியிடங்களில் குரூப் 1 தேர்வில் ஏற்கெனவே வெற்றி பெற்று காத்திருப்போர் பட்டி யலில் இருந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ள நிலையில், 14 காலியிடங்களை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர் களைக் கொண்டு நிரப்பியது சட்டவிரோதம். 14 பேர் மாற்றுப் பணிக்குச் சென்றது, அவர்களது இடத்தில் காத்திருப்போர் பட்டி யலில் உள்ளவர்களை நியமனம் செய்த விவரங்களை உச்ச நீதிமன்றத் தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவிக்கவில்லை.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காலியிடத்தில் நியமனம் செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் களாக பணிபுரியும் ஜானகிராமன், பாலமுருகன், முருகேசன் உள்ளிட்ட 14 பேரின் நியமனம் செல்லாது என அறிவிக்கவும், அதுவரை 14 பேரும் பணியில் தொடர தடையும் விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ் வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக் கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார். விசாரணைக்குப் பின், இந்த மனுவுக்கு தலைமைச் செயலர், பொது நிர்வாகத் துறை செயலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணை ஏப்.1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE