கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி

கோவையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் மேலும் ஒருவர் பலியானார். கடந்த ஜனவரி மாதம் முதல் கோவையில் இதுவரை 7 பேர் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியாகியுள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (38). இவர் பன்றிக்காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 5 மணியளவில் அவர் பலியானார். முத்துக்குமாருடன் சேர்த்து கோவையில் இதுவரை பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, இதுவரை பலியான 7 பேருக்கும் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்தாலும், 3 பேருக்கு ஏற்கெனவே ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் பாதிப்பு ஆகியன இருந்துள்ளன. எனவே அவர்கள் மரணத்துக்கான காரணம் முழுமையாக பன்றிக் காய்ச்சல் பாதிப்புதானா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. தற்போது, அரசு மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் பன்றிக்காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்