மோடி இலங்கை பயணம் எதிரொலி: நாகை, காரைக்கால் மீனவர்கள் 86 பேர் விடுதலை

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை சுற்றுப் பயணத்தை முன்னிட்டு சிறைபிடிக்கப்பட்ட 86 தமிழக மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றங்கள் நேற்று உத்தரவிட்டன.

நாகப்பட்டினம், காரைக் காலைச் சேர்ந்த 86 மீனவர்கள் 10 விசைப்படகுகளில் கச்சத்தீவு மற்றும் முல்லைத்தீவு கடற்பகுதியில் பிப். 26-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து யாழ்ப்பாணம் சிறையில் 43 பேரையும், திரிகோணமலை சிறையில் 43 பேரையும் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இவர்களது காவல் மார்ச் 13-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், ''இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு வர உள்ள நிலையில் நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்'' என இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

அதன்பேரில் மீனவர்களின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பருத்தித் துறை, திரிகோணமலை நீதிமன் றங்களில் தமிழக மீனவர்கள் 86 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு விடு தலை செய்யப்பட்டனர். ஆனால் கைப்பற்றப்பட்ட 10 படகுகளும் விடுதலை செய்யப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்