உடன்குடி மின் திட்ட டெண்டர் ரத்து: முடிவுக்கு வந்தது வழக்கு

உடன்குடி மின் திட்டத்துக்கான டெண்டரை ரத்து செய்ததற்கான காரணத்தை தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

டெண்டர் ரத்து தொடர்பாக சீன நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி தங்கள் நிறுவன டெண்டர் ரத்து செய்யப்பட்டது .

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் டெண்டரை ரத்து செய்ததற்கான காரணங்களையும், ஆவணங்களையும் தரவேண்டும் என்று அந்நிறுவனம் மனுவில் கூறியது. இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சோமையாஜி தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத் தன்மை சட்டப்படி டெண்டர் ரத்து செய்ததற்கான காரணத்தை தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

இதனையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE