சென்னைக்கு ரூ.1,101 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள்

சென்னையில் ரூ.1 ஆயிரத்து 101 கோடியே 43 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக் கும் பணிகள் நடைபெறும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்-III வெற்றிகரமாகச் செயல் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ரூ.2 ஆயிரத்து 212 கோடியே 89 லட்சம் மொத்த ஒதுக்கீட்டில் தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப் புற கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியில் ரூ.1 ஆயிரத்து 101 கோடியே 43 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள பெரும் மழைநீர் வடிகால் பணியும் இத்திட்டத்தில் அடங்கும். 2015-16-ல் இத்திட்டத்துக்கு ரூ.152 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

234 பேரூராட்சிகளில் சாலைகள், பாலங்கள் அமைக்க ரூ.140 கோடியே 32 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 17 பேரூ ராட்சிகளில் கழிவுநீர் மேலாண்மை திட்டங்களுக்காக ரூ.197 கோடியே 34 லட்சமும், ஒரு மாநகராட்சி, 20 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டங்களுக்காக ரூ.2 ஆயிரத்து 41 கோடியே 61 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE