கிரானைட் முறைகேடுகளை விசாரித்துவரும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கூலிப்படை வைத்து கொலை செய்யப்படுவார் என்று திருச்சி சிறையில் கைதிகள் பேசிக் கொண்டதாக கூறப்படும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கர்நாடக ஐஏஎஸ் அதிகாரி ரவியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து தமிழகத் திலும் சகாயம் போன்ற நேர்மை யான அதிகாரிகளுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும் என தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்நிலையில்தான் சகாயத்தை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டப் போவதாக திருச்சி மத்திய சிறைக் குள் தண்டனைக் கைதிகள் பேசிக் கொண்டதாகக் கூறப்படும் தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து சகாயத்துக்கு நெருக் கமானவர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ‘‘போலீஸ் பாதுகாப்பு கேட்கும்படி நாங்கள் எத்தனையோ முறை சொல்லியும் அவர், ’நேர்மை மட்டும் போதாது, துணிச்சலும் வேண்டும்’ என்று சொல்லி பாதுகாப்புக் கேட்க மறுத்துவிட்டார்.
சகாயத்தின் சொந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் இருந்தார். அவர் விடுதலையாகி ஊருக்கு வந்ததும் சகாயத்தின் சகோதரரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், கூலிப் படையை வைத்து சகாயத்தை கொலை செய் யப்போவதாக சிறைக்குள் கைதிகள் பேசிக்கொண்டதாக தகவல் கூறினார். அப்போது சகாயம் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
இதுகுறித்து சகாயத்திடம் தெரிவிக் கப்பட்டும் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவரது மகன் வற்புறுத்தலின்பேரில் கடந்த 2013 மார்ச் 22-ல் தலைமைச் செயலாளரைச் சந்தித்து திருச்சி மத்திய சிறைக்குள் கைதிகள் பேசிக் கொண்ட விவரத்தை சகாயம் கூறியுள்ளார்.
மேலும் பாதுகாப்பு தேவை என்று கருதும்பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கடிதம் கொடுத்தார். ஆனால், 2 ஆண்டுகளாகியும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சட்ட ஆணையராக நியமிக்கப்பட்ட பிறகு நீதிமன்ற உத்தரவுப்படியே அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப்பின் அதுவும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிடும்.
இந்நிலையில் அண்மையில் சென்னையிலுள்ள சகாயத்தின் இல்லத்துக்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சகாயத்தைப் பற்றி அவரது மனைவியிடம் விசாரித் திருக்கிறார்.
இதை பார்க்கும்போது எங்களுக்கும் சந்தேகமாய் இருக் கிறது. இரண்டாவது கொலை மிரட் டல் கடிதமும் வந்திருப்பதால் இனியாவது சுதாரித்துக் கொண்டு சகாயத்தின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும்’’. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago