டிராபிக் ராமசாமி கைது குறித்த நிலவர அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

டிராபிக் ராமசாமி கைது விவகாரத்தில் தற்போதைய நிலைமை குறித்த நிலவர அறிக் கையை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.பாத்திமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

சமூக ஆர்வலர் டிராபிக் ராம சாமியை பழிவாங்கும் நோக்கில் காவல் ஆணையர், உதவி ஆணை யர், காவல் ஆய்வாளர் ஆகியோர் சதி செய்துள்ளனர். வீரமணி என் பவர் மூலம் பொய் புகார் கொடுக் கச் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அவரை கைது செய்தனர்.

ஒருவரை கைது செய்யும்போது பின்பற்றவேண்டிய எந்த நடை முறைகளும் 82 வயதாகும் டிராபிக் ராமசாமியை கைது செய்யும் போது பின்பற்றப்படவில்லை. கைது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

உள்நோக்கத்தில் டிராபிக் ராமசாமியை கைது செய்த காவல் ஆணையர் ஜார்ஜ், உதவி ஆணையர் ஐயப்பன், வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் பிரபு, பொய் புகார் அளித்த வீரமணி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு கடந்த 12-ம் தேதி மனு அனுப்பினேன். அதை அவர்கள் பரிசீலிக்கவில்லை. அந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் பாத்திமா கூறியிருந்தார்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் நேற்று விசாரித்தார். டிராபிக் ராமசாமி கைது விவகாரத்தில் தற்போதைய நிலைமை குறித்த நிலவர அறிக்கையை (Status Report) தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்