திமுக கூட்டத்துக்கு கட்டாய வசூல்?- கண்டித்து திருப்பனந்தாளில் கடையடைப்பு

By செய்திப்பிரிவு

கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில், திமுக பொதுக்கூட்டத்துக்காக மிரட்டி நன்கொடை வசூல் செய்ததாகக் கூறி வர்த்தகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாள் நகரில், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 15) மாலை நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் அப்பகுதி திமுகவினர் வர்த்தகர்களிடம் நன்கொடையாக பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பனந்தாள் வர்த்தக சங்கத் தலைவர் ரவிக்குமார் தலைமையில், திமுகவினரை கண்டித்து வர்த்தகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில், வர்த்தகர் சங்கத்தில் உள்ள அதிமுக ஆதரவாளர்களைக் கொண்டு, திமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும், பொதுக்கூட்டத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்