காங்கிரஸ் மூத்த தலைவர் கிள்ளிவளவன் மறைவு

By செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் காமராஜர் ஆகியோரின் நெருங்கிய தோழராக விளங்கிய மூத்த காங்கிரஸ் தலைவர் தி.சு.கிள்ளிவளவன் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

சென்னையில் 1926-ம் ஆண்டு பிறந்தவர் கிள்ளிவளவன். திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டப் பிரதிநிதியாக இருந்து பெரியாருடன் இணைந்து செயல்பட்டவர். அண்ணா திமுகவை தொடங்கிய பிறகு அண்ணாவின் நிழல்போல எப்போதும் அவருக்கு அருகில் இருந்து பணியாற்றியவர்.

எனினும், பின்னர் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காமராஜருடன் மிக நெருக்கமான நட்பை பாராட்டினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் உள்பட பல முக்கியப் பொறுப்புகளை அக்கட்சியில் வகித்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவதிப்பட்டு வந்த கிள்ளிவளவன், வறுமையாலும் பாதிக்கப்பட்டார். அவரது நிலை அறிந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அண்மையில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் கிள்ளிவளவன் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் உடல் நிலை மோசமானதால் இன்று மாலை கிள்ளிவளவன் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கம் புதுக்குளத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்