தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமயமூர்த்தி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய சிறப்பு மருத்துவர்கள், உறைவிட மருத்துவர்கள், பெண் நர்சுகள், பெண் டெக்னீசியன்கள் தேவைப்படுகிறார்கள்.
சிறப்பு மருத்துவர் பணிக்கு இதயப்பிரிவில் 2 ஆண்டு அனுபவம் அவசியம். வயது 55-க்குள் இருக்க வேண்டும். உறைவிட மருத்துவர் வேலைக்கு எம்பிபிஎஸ் பட்டமும் டிப்ளமாவும் தேவை. வயது 45-க்குள் இருக்க வேண்டும்.
நர்சு வேலைக்கு பிஎஸ்சி அல்லது எம்எஸ்சி நர்சிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு அனுபவம் அவசியம். வயது 35-க்குள் இருக்க வேண்டும். டெக்னீசியன் பணிக்கு பிஎஸ்சி பட்டப் படிப்பில் எக்கோ, கேத்லேப், ரெஸ்பிரேட்டரி, பர்பியூசனிஸ்ட் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணிஅனுபவம் தேவை. வயது 35-க்குள் இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கான நேர்முகத்தேர்வு டெல்லி, பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்களில் மார்ச் 15 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய >www.omcmanpower.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். மேலும், 044-22502267 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago