புதுச்சேரியில் 2016-17-ல் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்த பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வந்த துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங்கை பேரவைத் தலைவர் வ.சபாபதி, முதல்வர் என்.ரங்கசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து துணைநிலை ஆளுநர் சிங் ஆற்றிய உரை:
நடப்பாண்டு 2015-16 திட்ட ஒதுக்கீடாக ரூ.2800 கோடிக்கு மாநில திட்டக்குழு அனுமதி அளித்துள்ளது. நிதி ஆயோக் முதல் நிர்வாகக் கூட்டத்துக்கு பின் புதுச்சேரி முதல்வரையும் ஒரு உறுப்பினராக சேர்த்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய கால்நடை திட்டத்தின்கீழ் நிதி உதவி பெற மாநில கால்நடைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இலவச அரிசிக்கு பதிலாக ரூ.300 ரொக்கம் வழங்கும் திட்டம் நடை முறைப்படுத்தப்படும்.
குடிசைகள் இல்லா நகரம்
புதுச்சேரியில் 2016-17-ல் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்த பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி நகரை குடிசைகள் இல்லா நகரமாக மாற்ற செயல் திட்டம் தயாரிக்கும் பணியை குடிசை மாற்று வாரியம் செய்து வருகிறது. இது மே மாதம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்தியாவில் உற்பத்தி செய் என்ற திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தொழில்வழிகாட்டி அமைப்பு ஒன்று ஒற்றைச்சாளர முறையாக செயல்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகள் தொடங்க ஒற்றைச்சாளர முறையில் ஒப்புதல் அளிக்கும் முறையை அமல்படுத்த அரசு தீவிரமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago