கரூர் நகராட்சியின் ஒருங் கிணைந்த பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அதிமுக கவுன்சிலருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் நகராட்சி அதிமுக கவுன்சிலர் ஏகாம்பரம். இவர் கரூர் நகராட்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை, கருப்பம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மணலியூர் கிராமத்தில் கட்டும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதேபோல், மேலும் 4 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் உத்தரவில், கரூர் நகராட்சிக் கூட்டத்தில் கருப்பம்பாளையம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஏகாம்பரம் தவிர்த்து மற்ற அனைத்து கவுன் சிலர்களும் ஆதரவு தெரிவித் துள்ளனர். நகராட்சி நிர்வாகம் ஜனநாயக அமைப்பாகும். அந்த அமைப்பு நிறைவேற்றிய தீர்மானத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது.
எனவே, ஏகாம்பரத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப் படுகிறது. இந்தப் பணத்தை அவர் கரூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago