புதுச்சேரியில் தொடங்கியது இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு: மோடி அரசை எதிர்க்கும் சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் - இடதுசாரிகளுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு

மோடி அரசை எதிர்க்கும் சக்தியை இடதுசாரிகள் அதிகரித் துக்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு புதுவையில் நேற்று தொடங்கியது. வரும் 29-ம் தேதி வரை மாநாடு நடைபெறவுள்ளது. முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார்.

நெருக்கடியில் இந்தியா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியா தற்போது சிக்கலான காலகட்டத்தில் உள்ளது. அபாயநிலை இருந்தாலும் பெரு முதலாளிகள் மற்றும் நிறுவனங்களின் சொத்து மட்டும் உயர்ந்துகொண்டே போகிறது. மத அடிப்படையில் நாட்டை துண்டாட முயற்சிக்கின்றனர்.

மதச்சார்பின்மை, சமத்துவம், ஜனநாயகத்தைக் காக்க இடது சாரி இயக்கங்களால்தான் முடி யும். சர்வதேச வர்த்தக நிறுவனங் களுக்கு சாதகமாக மோடியின் அரசு செயல்படுகிறது.

இந்தியாவில் 28 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். ஆனால், நாட்டின் வளத்தில் 25 சதவீதத்தை 681 பெருமுதலாளிகளின் குடும் பங்களே சுரண்டுகின்றனர் என்றார் சுதாகர் ரெட்டி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசும்போது:

மோடி தலைமையிலான மத்திய அரசில் பெரும்பான்மை மக்களுக்கு ஏழ்மையும், சிலருக்கு பொருளாதார வளமும் கிடைத்து வருகின்றன. சிறுபான்மையினரின் வழிபாட்டுக் கூடங்கள் மீது தாக்குதல், பெண்கள், தலித்துகளுக்குப் பாது காப்பின்மை, மாட்டு இறைச்சிக்குத் தடை, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு பாதிப்பு போன்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள இந்தச் சூழலை இடதுசாரிகளால்தான் தடுக்க முடியும். இதற்கு பாதிக் கப்பட்ட மக்களோடு இணைந்து போராட வேண்டும். இடதுசாரி இயக்கங்கள், அடித்தட்டு மக் களை ஒன்றுதிரட்டி, பெரிய போராட்டங்களை நடத்த வேண் டும். அப்போதுதான் ஜனநாயகம், மதச் சார்பின்மை, மக்களின் உரிமைகளைக் காக்க முடியும்

விவசாயிகளின் நிலங்களை அவர்களின் ஒப்புதல் இல்லா மலேயே அபகரிக்க சட்டம் கொண்டுவர முயற்சி நடக்கிறது. 6 இடதுசாரிக் கட்சிகள் தற்போது ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. மோடி அரசை எதிர்க்கும் சக்தியை இடதுசாரிகள் அதிகரிப்பது அவசியம் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகளின் முக்கிய தலைவர்களான தேவபிரத பிஸ்வாஸ், அபானிராய், தீபங்கர் பட்டாச்சார்யா, பிரவோஷ் கோஷ் ஆகியோர் மாநாட்டில் உரையாற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE